ADVERTISEMENT

ஓமான்: விசா புதுப்பித்தலுக்கு இனி பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் பெற தேவையில்லை..!! அறிவிப்பை வெளியிட்ட காவல்துறை..!!

Published: 18 Sep 2022, 7:02 PM |
Updated: 18 Sep 2022, 7:07 PM |
Posted By: admin

ஓமானில் ரெசிடென்ஸ் விசா விதியின் புதிய திருத்தத்தின்படி, வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட்டில் இனி விசா ஸ்டாம்ப் கட்டாயமாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயல் ஓமன் போலீஸ் (ROP) அறிவித்துள்ளதன்படி, விசா பற்றிய விபரங்களை அறிய குடியிருப்பு அட்டை (residence card) ஒன்றே போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ராயல் ஓமன் காவல்துறை (ROP) வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட்டில் முன்னர் விசா ஸ்டாம்ப் வைக்கப்பட்டது. ஆனால் அது தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. ​​அதற்கு பதிலாக ரெசிடென்ஸி விபரங்களை அறிய குடியிருப்பு அட்டை போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெசிடென்ஸி விசாவினை புதுப்பிக்க வழக்கமான முறையில் அல்லாமல் ஆன்லைனில் புதுப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்கள் குறித்து குடியிருப்பாளர்கள் தெரிவித்த நிலையில் காவல்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

ADVERTISEMENT

இது பற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரெசிடென்ஸ் விசா புதுப்பித்தலின் போது பாஸ்போர்ட்டில் முத்திரையிடும் முறை நிறுத்தப்பட்டுள்ளது. ரெசிடென்ஸ் கார்டே குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் விசா நிலையை தெரிந்து கொள்ள போதுமானது. இதன்படி ஒரு நபரின் பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம் இருந்தாலும் இல்லையென்றாலும் விசா பற்றிய தகவல்களுக்கு ரெசிடென்ஸ் கார்டினை ஆதாரமாக வைத்து அவர் பயணம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.