ADVERTISEMENT

எமிரேட்ஸ் விமானத்திற்கு போட்டியாக புதிய விமானம்.. 30 பில்லியன் டாலர் முதலீட்டில் புதிய விமானத்தை இறக்கும் சவுதி அரேபியா..!

Published: 8 Sep 2022, 8:18 PM |
Updated: 8 Sep 2022, 8:58 PM |
Posted By: admin

சவூதி அரேபியா தனது பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய சர்வதேச விமான சேவையை தொடங்க உள்ளது. கடந்த 12 மாதங்களாக பொது முதலீட்டு நிதியத்தின் ஆதரவால் புதிய முயற்சியுடன் அந்நாட்டு அரசு பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த புதிய விமான சேவையின் பெயர் “RIA” என்று குறிப்பிடப்படுகிறது.

ADVERTISEMENT

“எமிரேட்ஸ் போட்டியாக ஒரு புத்தம் புதிய விமான சேவை தயாராகி வருகிறது. இது விமான வரலாற்றிலேயே புதுமை வாய்ந்தது. இதுவரை இதற்கு தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படவில்லை” என்று சவூதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இதன் இறுதி முடிவை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சவூதி அரேபியா 2030 ஆம் ஆண்டளவில் 30 மில்லியன் சர்வதேச போக்குவரத்து பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது, தற்போது இருப்பது நான்கு மில்லியனுக்கு குறைவானதாகும். புதிய விமான சேவை ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் 150 வழித்தடங்களை இயக்க உள்ளது, மேலும் $30 பில்லியன் முதலீட்டில் இந்த விமான சேவை துவங்கப்பட உள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம் தற்போது 85 நாடுகளில் 158 இடங்களுக்கு செல்கிறது.

ADVERTISEMENT

தற்போதுவரை சவூதிக்கு வரும் மொத்த விமானப் போக்குவரத்தில் 60 சதவீதம் பயணிகள் மத்திய கிழக்கில் இருந்தும், ஆசியா-பசிபிக்கில் இருந்து சுமார் 20 சதவீதமும், ஆப்பிரிக்காவில் இருந்து 10 சதவீத பயணிகளும் வந்துச்சொல்வதாக கூறப்படுகிறது.