ADVERTISEMENT

சவூதியின் பிரதமராக அறிவிக்கப்பட்ட இளவரசர் முகம்மது பின் சல்மான்..!! தலைவர்கள் வாழ்த்து..!!

Published: 28 Sep 2022, 9:24 AM |
Updated: 28 Sep 2022, 6:00 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவின் மன்னரான சல்மான் பின் அப்துல்அஜிஸ், தனது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் அவர்களை நாட்டின் பிரதமராகவும், அவரது இரண்டாவது மகன் இளவரசர் காலித்தை பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளதாக சவூதியின் அரச ஆணை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த மறுசீரமைப்பின் போது மற்றொரு மகனான இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அரச ஆணையானது சவூதியின் அரசு செய்தி நிறுவனமான SPA மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சவூதியின் வெளியுறவு துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத், நிதியமைச்சர் முகமது அல் ஜதான் மற்றும் முதலீட்டு அமைச்சர் காலித் அல் ஃபாலிஹ் ஆகியோர் தங்களது பதவியில் இருந்து மாறாமல் இருப்பதாக ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன் இளவரசர் முகமது பின் சல்மான் பாதுகாப்பு அமைச்சராகவும், பட்டத்து இளவரசரின் இளைய சகோதரரான இளவரசர் காலித் பின் சல்மான், துணை பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசர் முகம்மது பின் சல்மான் சவூதியின் பிரதமராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து துபாயின் இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதனுடன் பிற தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

ADVERTISEMENT

எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.