அமீரகத்தில் இன்று (செப்டம்பர் 23) சவூதி தேசிய தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆங்காங்கே தேசிய தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கொண்டாட்டங்கள் செப்டம்பர் 26 வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனையொட்டி துபாயின் மிகவும் பிரபலமான அடையாளங்கள், இன்று இரவு 7 மணிக்கு சவூதி அரேபியாவின் தேசிய கொடியின் வண்ணங்களில் ஒளிரும் என கூறப்பட்டுள்ளது. இதில் புர்ஜ் அல் அராப், அய்ன் துபாய் மற்றும் துபாய் ஃபிரேம் ஆகியவை அடங்கும் என்றும் அத்துடன் இரவு 9 மணிக்கு JBR பகுதியில் உள்ள ‘The Beach’-ல் வானவேடிக்கை நிகழ்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் சலுகைகளுடன் ஏழு நாள் தங்கும் வசதியை விசிட்டர்களுக்கு வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாயின் மால்கள் முழுவதிலும் உள்ள சிறந்த ஃபேஷன் ஆடைகள், பாகங்கள், காலணிகள், அழகுசாதனப் பொருட்கள், அழகு மற்றும் வாசனை திரவியங்கள், வீடு மற்றும் வெளிப்புற அலங்காரங்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்தகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்கள் ஆகியவற்றில் 25 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை Arabian Oud இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 40 சதவீத தள்ளுபடியை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துபாயில் உள்ள அவுட்லெட் வில்லேஜ் (outlet village) சவூதி தேசிய தினத்தை லைவ் இசையுடன் கொண்டாடவுள்ளது மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் ஒரு சிறப்பு IMAGINE ஃபவுண்டேஷன் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இதே போல சவூதி தேசிய தினத்தை முன்னிட்டு அபுதாபியின் அல் அய்ன் zoo-வில் இன்றும் நாளையும் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.