ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வார இறுதியில் கோடைக்காலம் முடிந்து இலையுதிர் காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை தற்பொழுது குறையத் தொடங்கியுள்ளது. மேலும் தினசரி இரவு மற்றும் அதிகாலையில் மூடுபனியும் நிலவி வருகிறது.
அதில் இன்று (செப்டம்பர் 29, வியாழன்) ராஸ் அல் கைமாவில் உள்ள மெப்ரே (Mebreh) மலையில் 19.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அமீரகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
NCM இன் முன்னறிவிப்பின்படி, அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் மழை மேகங்கள் உருவாகும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வானியலாளர்களின் கூற்றுப்படி, இலையுதிர் காலத்தில் வெப்பநிலை 40 ° C முதல் 20 ° C வரை இருக்கும் என்றும், அதே நேரத்தில் பாலைவனத்தில் வெப்பநிலையானது 20 ° C க்கும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இரவும் பகலும் சம நீளம் கொண்டவையாக இருக்கும் என்றும் அமீரகத்தில் குளிர்காலம் வரும்போது, இரவுகள் நீளமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
#المركز_الوطني_للأرصاد #الإمارات_العربية_المتحدة #حالة_الطقس #أمطار #ضباب #حالة_البحر #سرعة_الرياح #إتجاه_الرياح#NCM #UAE #officialuaeweather #weatherforecast #seastate #windspeed #winddirection #rain #fog pic.twitter.com/e2auucFMtB
— المركز الوطني للأرصاد (@NCMS_media) September 28, 2022