ADVERTISEMENT

இயல்பு நிலைக்கு திரும்பிய அமீரகம்..!! புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள் என்னென்ன..??

Published: 29 Sep 2022, 5:16 PM |
Updated: 29 Sep 2022, 5:20 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை அமீரக அரசு தளர்த்தியுள்ளது. இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த பெரும்பாலான கொரோனா விதிகள் தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் நேற்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

அத்துடன் கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக கொரோனால் வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நாளிலிருந்து 1,000வது நாள் அன்று அமீரக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமீரக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகளின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய மாற்றங்களின் முழு பட்டியல்: 

முக கவசம்

>> பள்ளிகள் உட்பட பெரும்பாலான பொது இடங்களில் முக கவசம் இனி கட்டாயமில்லை. விருப்பப்பட்டால் போட்டுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

>> ஆனால் மசூதிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாகும்.

>> கொரோனா நோயாளிகள் மற்றும் கொரோனா இருப்பதாக சந்தேகப்படும் நபர்களுக்கு முக கவசம் கட்டாயமாகும்.

ADVERTISEMENT

>> வயதானவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும்  முக கவசம் பரிந்துரைக்கப்படுகின்றன.

>> உணவு டெலிவரி செய்பவர்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். 

விமான பயணம்

>> விமானங்களுக்குள் முக கவசம் அணிவது இனி கட்டாயமாக இருக்காது

>> தேவைப்படும் பட்சத்தில் விமான நிறுவனங்கள் முகக்கவச விதியை அமல்படுத்தலாம்

>> ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வேறு நாட்டிற்கு பயணம் செய்பவர்களுக்கு, அந்நாட்டில் நடைமுறையில் உள்ள முக கவச விதிகள் பயணிகளுக்கு பொருந்தும்.

கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கான விதிகள் 

>> பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஐந்து நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

>> கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் கொரோனாவிற்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே PCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

>> குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட நோய்த்தொற்று எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகைகளைச் சேர்ந்தவர்களுக்கும் PCR சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மசூதிகள் போன்ற வழிபாட்டுத் தலங்கள்

>> வழிபாட்டு இடங்களில் வழிபாட்டாளர்களிடையே கட்டாய சமூக இடைவெளி இனி தேவையில்லை. ஆனால் முக கவசம் கட்டாயம்.

>>மசூதிகளில் வழிபடுபவர்கள் தங்கள் சொந்த தொழுகை விரிப்புகளை கொண்டு வர வேண்டும்.

அல் ஹோஸ்ன் அப்ளிகேஷன் கிரீன் பாஸ்

>> தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு அல் ஹோஸன் கிரீன் பாஸின் செல்லுபடி காலம் 14 நாட்களில் இருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

>> இதன்படி கொரோனாவிற்கான எதிர்மறை PCR சோதனைக்குப் பிறகு 30 நாட்களுக்கு பாஸ் பச்சை நிறத்தில் இருக்கும்.

>> தடுப்பூசி போடாதவர்கள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் PCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

>> அபுதாபி மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் சில பொது இடங்களுக்கு நுழைவதற்கு கிரீன் பாஸ் கட்டாயம்.

அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையை அரசு இனி அறிவிக்காது. மாறாக, அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தகவல்கள் புதுப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.