ADVERTISEMENT

அமீரகத்தில் பெய்த ஆலங்கட்டி மழை..!! சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ..!!

Published: 13 Sep 2022, 6:18 PM |
Updated: 13 Sep 2022, 6:19 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழையுடன் சேர்த்து  ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்க காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளைத் தூண்டியுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இருக்கும் Mleiha-Fili சாலையில் இன்று பனியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. இதே போன்றதொரு மற்றொரு வீடியோவில், ஆலங்கட்டி மழை, கனமழை மற்றும் தூசி என அனைத்தும் ஒரே நேரத்தில் காட்டப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

மேலும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அமீரகத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஷார்ஜாவின் அல் மடம், பதேஹ் மற்றும் மிலேஹா ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என ஆணையம் தெரிவித்துள்ளது. அல் அய்னில் லேசான மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், அல் அய்னில் உள்ள ஸ்வீஹானில் 46.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.