ADVERTISEMENT

UAE: சம்பளம் போடுவதற்கு முன்னரே சம்பள பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதி..!! வங்கி அறிவித்துள்ள சூப்பர் ஸ்கீம்..!! விபரங்கள் உள்ளே..!!

Published: 20 Sep 2022, 5:36 AM |
Updated: 20 Sep 2022, 8:32 AM |
Posted By: admin

அமீரகத்தில் சம்பளம் வாங்குவதற்கு முன்கூட்டியே நம்மில் பலருக்கு பல்வேறு காரணங்களுக்காக பணத்தேவை இருக்கும். சம்பளம் எப்போது போடுவார்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டோ இல்லையெனில் சம்பளம் போடுவதற்கு முன்னரே ஏற்படும் பணத்தேவையை பூர்த்தி செய்ய மாற்றுவழி இருக்கிறதா என்பதை யோசித்துக் கொண்டிருக்கும் நபர்களுக்காகவே பயனுள்ள ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது அமீரக வங்கி. மாத சம்பளம் போடும் முன்னரே சம்பளத்தை எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை அளிக்கிறது இந்த புதிய திட்டம். இது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.

ADVERTISEMENT

நபர்களுக்கு வழங்கப்படும்  மாத சம்பளத்தில் பாதி தொகையை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் ஒரு புதிய திட்டத்தை அமீரகத்தில் செயல்பட்டு வரும் அபுதாபி இஸ்லாமிக் பேங்க் (ADIB) அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அம்சமானது, வங்கியின் பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வழக்கமான சம்பள நாளுக்கு முன்னரே வாடிக்கையாளர்கள் தங்களின் சம்பளத்தில் 50% வரை பெற அனுமதிக்கும் என கூறப்பட்டுள்ளது.

முன்னணி இஸ்லாமிக் நிதி நிறுவனமான இந்த வங்கி, இந்த ஸ்கீமினை ‘Yusr- ADIB Salary Advance’ என்று பெயரிட்டுள்ளது. புதுமையான  சேவைகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த ஸ்கீம், முன்கூட்டியே சம்பளத் தொகையை உடனடியாகப் பெற வங்கி அதன் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த “ADIB Yusr Salary Advance Finance” என்பதை மொபைல் பேங்கிங் செயலி மூலம் அணுகலாம் என்றும் தற்போதுள்ள ADIB சம்பள பரிமாற்ற (salary transaction) வாடிக்கையாளர்களுக்கு, (அமீரக நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட) அவர்களின் நிதிகளை நிர்வகிக்கவும், அவர்களின் குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்கீம் வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுப்பதற்கான வசதியை வழங்குவதையும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 50% வரை, (அதிகபட்சமாக 50,000 வரை) அடுத்த சம்பள பரிமாற்றம் (salary transaction) வரை முன்கூட்டியே அணுகுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் குறைந்தபட்சம் மாதம் 5,000 திர்ஹம் சம்பளம் பெறும் நபர்களுக்கே இது வழங்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ADIB-ன் சில்லறை வங்கிக் குழுமத்தின் உலகளாவிய தலைவரான சமிஹ் அவதல்லா கருத்துத் தெரிவிக்கையில்: “ADIB Yusr சேலரி அட்வான்ஸ் ஃபைனான்ஸ்” திட்டத்தை அறிமுகப்படுத்துவது, எங்கள் வாடிக்கையாளர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான டிஜிட்டல் தயாரிப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் விளைவாகும். வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வங்கியின் ஒட்டுமொத்த உத்தியானது புதுமையான தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறது. மக்கள் தங்களின் வழக்கமான மாதாந்திர சம்பளத்தைப் பெறுவதற்கு முன்னரே அவர்களின் வழக்கமான பணத்தேவைகளை எதிர்கொள்வதால் சில நேரங்களில் சிரமங்களை எதிர்கொள்வதை நாங்கள் அவதானித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து இந்த தேவையை பூர்த்தி செய்ய கார்டு கட்டணத் திட்டங்கள் மூலமோ அல்லது மாற்று நிதி உதவியை அவர்கள் நாடுகின்றனர். இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த புதிய ஸ்கீம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் கடந்த மூன்று மாதங்களாக ADIB க்கு சம்பளம் வரவு வைக்கப்பட்டுள்ள தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு சம்பள முன்பணமானது கிடைக்கும் வகையில் இந்த ஸ்கீம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கீமைப் பெற தகுதியானவர்களா என்பதை மொபைல் ஆப் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.