ADVERTISEMENT

UAE: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த இருமல், சளி மருந்துகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த அபுதாபி சுகாதாரத் துறை..!!

Published: 15 Oct 2022, 3:54 PM |
Updated: 15 Oct 2022, 3:56 PM |
Posted By: admin

காம்பியாவில் சளி மற்றும் இருமல் மருந்துகளைக் கொடுத்த குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து அந்த இறப்பிற்குக் காரணமாக கருதப்படும் நான்கு இருமல் மற்றும் சளி மருந்துகள் அபுதாபியில் எங்கும் விற்கப்படவில்லை என அபுதாபி சுகாதாரத் துறை (DoH) ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த மருந்துகளை வைத்திருப்பவர்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்தியாவின் Maiden Pharmaceuticals நிறுவனம் தயாரித்த மருந்துகளால் ஆப்ரிக்காவின் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, குழந்தைகளின் இறப்பிற்கு இந்த மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று கூறியதை அடுத்து, இந்தியா இது பற்றி ஒரு விசாரணையைத் தொடங்கியதும் புது தில்லியை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் மருந்துகளின் அனைத்து உற்பத்தியையும் நிறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது குறித்து ஒரு சமூக ஊடக பதிவில், “DoH – அபுதாபி Maiden Pharmaceuticals Limited இன் நான்கு தயாரிப்புகள் அபுதாபியில் உள்ள அனைத்து சுகாதாரத் துறைகளிலும் விற்கப்படவில்லை. ஏனெனில் அவை சுகாதாரமற்ற பொருட்களைக் கொண்டிருக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

அந்த நான்கு மருந்துகள்Promethazine oral solution BP, Kofexmalin baby cough syrup, Makoff Baby and MaGrip n Cold ஆகியவை ஆகும்.

ADVERTISEMENT