ADVERTISEMENT

UAE: களப்பயிற்சியை இன்று மேற்கொள்ளும் அபுதாபி காவல்துறை..!! புகைப்படம் எடுக்க வேண்டாம் என குடியிருப்பாளர்களுக்கு அறிவுரை..!!

Published: 25 Oct 2022, 9:22 AM |
Updated: 25 Oct 2022, 9:25 AM |
Posted By: admin

அமீரகத்தில் காவல்துறைக்கு அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும். அந்த சமயங்களில் ஏற்படும் அதிக சப்தம் குறித்தும் அந்த இடங்களுக்கு அருகில் செல்வது குறித்தும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும். அதேபோல் அபுதாபியில் இன்று காவல்துறை களப்பயிற்சி மேற்கொள்ளவிருப்பதால் குடியிருப்பாளர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அபுதாபி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்த ஒரு சமூக ஊடக இடுகையில், அபுதாபி காவல்துறை இன்று, (அக்டோபர் 25, 2022) முசாஃபா பகுதியில் காவல்துறை ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியை நெருங்க வேண்டாம் என்றும், அப்பகுதியை விட்டு விலகி இருக்குமாறும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இப்பயிற்சியை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT