ADVERTISEMENT

UAE: அபுதாபியில் காவல்துறையினருக்கு பயிற்சி.. குடியிருப்பாளர்கள் மாற்று வழியை பயன்படுத்த அறிவுறுத்தல்..

Published: 1 Oct 2022, 8:57 PM |
Updated: 2 Oct 2022, 7:13 AM |
Posted By: admin

அபுதாபியில் காவல்துறையினர் களப்பயிற்சி மேற்கொள்ளவிருப்பதால் அது குறித்த அறிவிப்பு ஒன்றை குடியிருப்பாளர்களுக்கு அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை அபுதாபியில் இருக்கக்கூடிய சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டி பகுதியில் மூலோபாய பங்காளிகளுடன் இணைந்து நடத்தப்படும் களப் பயிற்சி குறித்து அபுதாபி காவல்துறை குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அப்பகுதியில் நடத்தப்படும் ஒத்திகையின் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளை காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த பயிற்சி நடத்தப்படும் இடத்திலிருந்து விலகி இருக்கவும், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எதுவும் எடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்த சமயங்களில் சப்தம் அதிகம் கேட்கும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு அபுதாபி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT