ADVERTISEMENT

பயணிகள் கவனத்திற்கு: நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு மிகவும் பிஸியாகும் துபாய் ஏர்போர்ட்..!! தினசரி 2 இலட்சத்திற்கு மேல் பயணம் செய்யவிருக்கும் மக்கள்..!!

Published: 20 Oct 2022, 8:23 PM |
Updated: 20 Oct 2022, 9:30 PM |
Posted By: admin

இன்னும் ஓரிரு நாட்களில் தீபாவளி வரவிருப்பதை முன்னிட்டும் அமீரகத்தில் உள்ள பள்ளிகளுக்கு Mid-Term விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) நாளை தொடங்கி 10 நாட்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும் என்று பயணிகளுக்கு துபாய் ஏர்போர்ட்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

2022 ம் ஆண்டு முழுவதும் விமான நிலையமானது கொரோனாவிற்குப் பிறகு வலுவான மீட்சியை கண்டு வருகிறது. இந்நிலையில் துபாய் விமான நிலையம் அக்டோபர் 21 முதல் அக்டோபர் 30 வரை சுமார் 2.1 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மொத்த சராசரி தினசரி போக்குவரத்து 215,000 பயணிகளை எட்டும் என கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அக்டோபர் 30 அன்று, தினசரி போக்குவரத்து 259,000 பயணிகளுக்கு மேல் இருக்கும் என்றும் அன்றைய தினம் விமான நிலையத்தில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து துபாய் ஏர்போர்ட்ஸானது விமான நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வணிக மற்றும் சேவை கூட்டாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி, ​​பயணிகள் வந்து செல்வதற்கும் புறப்படுவதற்கும் ஒரு மென்மையான அனுபவத்தை உறுதிசெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சமயங்களில் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வோர் கடைபிடிக்க வேண்டிய சில குறிப்புகள்:

>> நீங்கள் பயணிக்கும் இடத்திற்கான சமீபத்திய பயண விதிமுறைகள் குறித்து எச்சரிக்கையாக இருந்து விமான நிலையத்தை அடைவதற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களையும் செல்லுபடியாகும் தன்மையுடன் வைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

>> குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறையை விரைவுபடுத்த ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

>> நீங்கள் டெர்மினல் 1-ல் இருந்து பயணிக்கிறீர்கள் என்றால், நீங்கள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணிநேரம் முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து சேருங்கள்

>> நேரத்தை மிச்சப்படுத்த ஆன்லைன் செக்-இன் கிடைக்கும் இடங்களில் செக்-இன் செய்து கொள்ளலாம்.

>> டெர்மினல் 3 இலிருந்து பயணிப்பவர்கள் எமிரேட்ஸின் செக்-இன் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

>> தங்களின் லக்கேஜ்களை வீட்டிலேயே எடைபோடுவது, ஆவணங்களை முன்கூட்டியே சரிபார்ப்பது மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கு தயாராக இருப்பது போன்றவை விமான நிலையத்தில் உங்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

>> உங்களின் பயணத்தை எளிதாக்க துபாய் மெட்ரோவை விமான நிலையத்திற்குச் செல்லவும், வரவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

>> டெர்மினல் 3 இல் உள்ள வருகை (arrival) பகுதியில் பொதுப் போக்குவரத்து மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், விமான நிலையத்திற்கு வரும் நண்பர்களும் குடும்பத்தினரும் விமான நிலையத்தின் நியமிக்கப்பட்ட கார் பார்க்கிங் அல்லது வாலட் சேவையைப் பயன்படுத்தி தங்களின் உறவினர்களை அல்லது நண்பர்களை வரவேற்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.