ADVERTISEMENT

பயணிகளுக்கான பிரத்யேக பகுதி துபாய் சர்வதேச விமான நிலையத்தில் திறப்பு..!! அலுவல் சம்பந்தமான பணிபுரிய சிறப்பு வசதி..!!

Published: 29 Oct 2022, 4:52 PM |
Updated: 29 Oct 2022, 5:47 PM |
Posted By: admin

துபாயில் இனி வேலை மற்றும் வணிகம் சம்பந்தமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) பயணம் மேற்கொள்பவர்களுக்காக தற்பொழுது ஒரு சிறப்பு லவுஞ்ச் ஏரியா (lounge area) திறக்கப்பட்டுள்ளது. “Their Patio” என அழைக்கப்படும் இந்த பகுதியில் பயணிகள் தங்கள் விமானங்களுக்காகக் காத்திருக்கும் போதும் வேலை சம்பந்தமான அனைத்து வேலைகளையும் சகல வசதிகளுடன் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

DXB-யில் திறக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பகுதியானது கடந்த வியாழன் அன்று டெர்மினல் 3 இல் உள்ள அரைவல் பகுதியின் கேட் 3க்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது என்றும் இந்த லவுஞ்ச் பகுதியானது பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அவை வணிகப் பயணிகளுக்கு இடையூறு இல்லாத பணிச்சூழலை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பின்வருபவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

>> சந்திப்பு அறைகள் (meeting rooms)

ADVERTISEMENT

> தனிப்பட்ட அழைப்பு அறைகள் (private call rooms)

>> பகிரப்பட்ட அலுவலகங்கள் (shared offices)


இப்பகுதியில் விசா செயலாக்க சேவைகள், டைப்பிங் சென்டர் மற்றும் சேவைகளை முன்பதிவு செய்யக்கூடிய கவுண்டர்கள் உள்ளன. மேலும் “பயணிகள் வணிக சம்பந்தமாகவோ அல்லது ஓய்வு நேரத்திலோ அல்லது குழுவாகவோ பயணம் செய்தாலும், விமான நிலைய பரபரப்பையும் கூச்சலையும் விட்டு அமைதியான சூழ்நிலையில் தங்கள் வேலைகளை முடிப்பதற்கும்,  பெறுவதற்கும் இந்த ஓய்வறை வடிவமைக்கப்பட்டுள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.

லவுஞ்ச் கட்டணம்

523 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த பகுதி ஒரு நாளைக்கு 398 பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பகுதியை பயன்படுத்த விரும்புவோர் இரண்டு மணிநேரத்திற்கு 130 திர்ஹமும் 3 மணிநேரத்திற்கு 145 திர்ஹமும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Esaad கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் ஸ்மார்ட் டிராவலர்ஸ் மெம்பர்ஷிப் உள்ளவர்கள் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியைப் பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.