ADVERTISEMENT

துபாய்: இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தனியார் மருத்துவமனைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட DHA..!!

Published: 25 Oct 2022, 7:27 AM |
Updated: 25 Oct 2022, 7:54 AM |
Posted By: admin

துபாயில் அரசின் சுகாதார மையத்தில் மட்டுமே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், துபாயில் வசிப்பவர்கள் இனி தனியார் மருத்துவமனைகளிலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் சுகாதார ஆணையம் (DHA) திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கலானது தனியார் சுகாதாரத் துறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, துபாயில் உள்ள பொது மருத்துவமனைகள் மட்டுமே இந்த சான்றிதழ்களை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம், ​​HMS மிர்திஃப் மருத்துவமனை (HMS Mirdif Hospital) மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மெட்கேர் மருத்துவமனை (Medcare Hospital for Women and Children) ஆகியவை இந்த சேவையை வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது. வரக்கூடிய காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு மற்ற தனியார் துறை மருத்துவமனைகளிலும் இந்த சேவை படிப்படியாக தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, அல் ஜதஃபில் (Al Jaddaf) உள்ள DHA இன் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையமும் (customer happiness center) வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்குகிறது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த சேவையானது துபாய் எமிரேட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பதால் அல் கராமா மற்றும் அல் ரஷிதியாவில் உள்ள மெடிக்கல் ஃபிட்னஸ் சென்டர் இந்த சேவையை வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும் DHA அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மருத்துவமனைகளின் நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளை DHA மதிப்பாய்வு செய்து, மருத்துவமனைகள் நெறிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்த பின்னர், பல மருத்துவமனைகள் இந்தச் சேவையை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.