ADVERTISEMENT

UAE Jobs: டிரைவர், பைக்கர்களுக்கான நேர்முகத்தேர்வை நடத்தும் துபாய் டாக்ஸி..!! பெண்கள், லைசென்ஸ் இல்லாதவர்களும் கலந்துகொள்ளலாம்..!! விபரங்கள் உள்ளே..!!

Published: 20 Oct 2022, 12:18 PM |
Updated: 20 Oct 2022, 12:23 PM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தில் (RTA) உள்ள துபாய் டாக்சி கார்ப்பரேஷன் அனைத்து நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் பைக்கர்களைப் பணியமர்த்துவதற்கான வாக்-இன் இண்டர்வியூவினை நாளை நடத்தவிருக்கின்றது. இந்த வேலைக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் ஊக்குவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம், GCC அல்லது தங்கள் சொந்த நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் 23 முதல் 50 வயதுடையவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக, ஓட்டுநர் உரிமம் இல்லாத வேலை தேடுபவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்கள் நிறுவனத்தால் ஓட்டுநர் பயிற்சி பெறுவார்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் ஐக்கிய அரபு அமீரக உரிமம் பெற்ற பைக்கர்களும் இதில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு  நிறுவனமானது 2,000 திர்ஹம் சம்பளத்துடன் கமிஷன், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் தங்குமிடத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாக்-இன் நேர்காணலுக்குச் செல்லும் வேலை தேடுபவர்கள் தங்களுடைய ரெசிடென்ஸ்/விசிட் விசா, எமிரேட்ஸ் ஐடி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் CV ஆகியவற்றின் நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக விண்ணப்பதாரர்கள் தங்களின் மூன்று புகைப்படங்களையும் (white background) சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வானது நாளை (அக்டோபர் 21, வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, தேராவில் உள்ள பிரிவிலேஜ் லேபர் ஆட்சேர்ப்பு அலுவலகம் M11 (Privilege Labor Recruitment office M11), அபு ஹெயில் மையத்தில் நடைபெறும் என விபரம் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களை Job interview full details என்ற லிங்கில் சென்றும் கண்டு கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பதாரர்கள் தங்களின் CV-யினை privilege.secretary@gmail.com என்ற ஈமெயில் ஐடிக்கும் அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.