ADVERTISEMENT

துபாய் குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து..!!

Published: 1 Oct 2022, 5:09 PM |
Updated: 1 Oct 2022, 5:16 PM |
Posted By: admin

துபாயின் அல் நஹ்தா 1 குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தை அறிந்த சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தீவிபத்தானது சீசர்ஸ் உணவக கட்டிடத்தில் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் தீவிபத்தினால் பெரும் கரும் புகையானது அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பகுதியை காவல்துறையினரும் சிவில் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஹெலிகாப்டர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலும் தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT