ADVERTISEMENT

வாகனங்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த ஷார்ஜா.. மீலாது நபியை முன்னிட்டு அறிவிப்பு..!!

Published: 6 Oct 2022, 9:52 PM |
Updated: 7 Oct 2022, 1:06 PM |
Posted By: admin

முஹம்மது நபி பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு ஷார்ஜாவில் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  நீல நிற அடையாளங்களுடன் குறிக்கப்பட்ட 7-நாள் கட்டண பார்க்கிங் மண்டலங்களைத் (7 day paid parking zone) தவிர, மற்ற அனைத்து பொது பார்க்கிங் இடங்களிலும் இலவசமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம் என தெரிவிப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, இந்த நாளில் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என்று அமீரக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இந்த நாளானது வரும் அக்டோபர் 8 சனிக்கிழமை அன்று வருகிறது.

ஷார்ஜாவைப் போன்றே அமீரகத்தின் மற்றொரு எமிரேட்டான அபுதாபியும் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங் மற்றும் டோல் கேட் கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT