ADVERTISEMENT

UAE: பாம் ஜூமேராவிற்கு செல்வதை எளிதாக்கிய RTA..!! இனி மோனோரயிலில் Nol கார்டை பயன்படுத்தலாம் என அறிவிப்பு..!!

Published: 25 Oct 2022, 8:37 PM |
Updated: 25 Oct 2022, 8:41 PM |
Posted By: admin

துபாயில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் இப்போது RTA நோல் கார்டைப் பயன்படுத்தி ‘தி பாமிற்கு (The Palm)’ செல்ல வேண்டிய மோனோரயிலில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில், “இந்த முன்முயற்சியானது பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளை ஒருங்கிணைக்க உதவுகிறது மற்றும் துபாய் முழுவதும் பயணிகளுக்கு தடையற்ற பயணங்களை வழங்குகிறது” என்று கார்ப்பரேட் டெக்னாலஜி சப்போர்ட் சர்வீசஸ் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது யூசுப் அல் முதர்ரெப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “உயர்மட்ட உலகளாவிய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப தனியார் துறையுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான RTA-வின் மூலோபாயத்தை இந்த முயற்சி சேர்க்கிறது” என்று அல் முதர்ரெப் கூறினார். இதன் மூலம் பல சேவைகளை அணுக nol கார்ட் வைத்திருப்பவர்கள் இப்போது nol ஐப் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நோல் (nol) கார்டானது பயனர்கள் பல்வேறு RTA போக்குவரத்து சேவைகளை அணுக உதவுகிறது. இது மெட்ரோ, பேருந்துகள், டிராம் மற்றும் கடல் போக்குவரத்து வழிகளான வாட்டர் டாக்ஸி மற்றும் வாட்டர் பஸ் மற்றும் பொது பார்க்கிங் ஸ்லாட்டுகளின் கட்டணத்தை செலுத்த பயன்படுகிறது. மேலும் துபாய் முனிசிபாலிட்டியின் பொதுப் பூங்காக்கள் மற்றும் எதிஹாட் அருங்காட்சியகத்திற்கான நுழைவுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் இந்த கார்டினைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.