ADVERTISEMENT

தந்தையின் நினைவு நாள்..!! உருக்கமான பதிவை வெளியிட்ட துபாய் மன்னர்..!!

Published: 6 Oct 2022, 8:37 PM |
Updated: 6 Oct 2022, 8:48 PM |
Posted By: admin

துபாய் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமருமான மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அவரது தந்தையான, மறைந்த மாண்புமிகு ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களின் நினைவு நாளையொட்டி அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், “துபாயின் தந்தை 32 ஆண்டுகளுக்கு முன்பு எங்களை விட்டுச் சென்றாலும், அவரது மரபு எங்களை விட்டுச் செல்லவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் தனது தந்தை பற்றி விவரிக்கையில், “அவரது திட்டங்கள் எங்கள் வீதிகளை விட்டுச் செல்லவில்லை, அவருடைய பாடங்கள் நம் மனதை விட்டு அகலவில்லை. துபாயை கட்டி எழுப்பியவர், துபாயின் கட்டிடக் கலைஞர் மற்றும் துபாய் மக்களின் தந்தையான அவர் மீது கடவுள் கருணை காட்டட்டும்” என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு துபாய் மன்னர் தனது தந்தை குறித்து தெரிவிக்கையில் அவருடன் செலவழித்த மிக அழகான தருணங்கள் தனக்கு சிறுவயதிலிருந்தே பல்வேறு வாழ்க்கை பாடங்கள் மற்றும் ஞானத்தை தந்ததாக கூறியிருந்தார். 

மறைந்த ஷேக் ரஷீத் அவர்கள் 1958 முதல் 1990 ம் ஆண்டுகள் என அவர் இறக்கும் வரை துபாயை ஆட்சி செய்திருக்கிறார். 1971 இல் ஐக்கிய அரபு அமீரகம் உருவான சமயங்களில் மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுடன் இணைந்து அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

ADVERTISEMENT

தொலைநோக்கு மற்றும் அரசியல் திறமைக்கு பெயர் பெற்ற அவர், 1960 இல் துபாய் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்ததன் மூலம் துபாயை உலகத் தரம் வாய்ந்த பெருநகரமாக மாற்றிய பெருமையை பெற்றார். அதே்போன்று 1972 இல் போர்ட் ரஷித், 1978 இல் துபாய் உலக வர்த்தக மையம் மற்றும் 1979 இல் ஜெபல் அலி துறைமுகம் போன்ற திட்டங்களையும் செயல்படுத்தினார். மேலும் அவரது ஆட்சியின் போது கட்டப்பட்ட துபாய் க்ரீக் பகுதியை விரிவுபடுத்தி ஆழப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.