தமிழ்நாட்டில் பிறந்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் டீமில் தேர்வு செய்யப்பட்டு தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்டிருக்கும் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியின் போது, ஹாட்ரிக் விக்கெட் எடுத்துக் கொடுத்திருக்கிறார் தமிழர் ஒருவர்.
T20 உலக கோப்பை போட்ட தொடங்கப்பட்டு தற்பொழுது குரூப் ஸ்டேஜ் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. அதில் 6 வது போட்டியானது நேற்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நடந்தது. அந்த போட்டியில்தான் அமீரக டீமில் விளையாடிய தமிழ்நாட்டுக்காரரான கார்த்திக் பழனியப்பன் மெய்யப்பன், இந்த அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் அமீரக கிரிக்கெட் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் வாங்கிய முதல் ப்ளேயர் என்ற பெருமையையும் இவர் தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பிரட் லீ, கர்டிஸ் கேம்பர், ஹசரங்கா, ரபாடா ஆகிய 4 பேருக்கு அடுத்ததாக 20-20 உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஐந்தாவது ப்ளேயர் என்கிற பெயரையும் இவர் பெற்றுள்ளார். இவர் விக்கெட் எடுத்துக் கொடுத்த மூன்று பிளேயருமே பானுக ராஜபக்சே, சரித் அசலங்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் டீமின் கேப்டன் தசுன் ஷனகா என முக்கியமான ப்ளேயர்ஸ் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிறந்து தற்போழுது அப்பா, அம்மா, தங்கை என்று குடும்பத்துடன் துபாயில் வசித்து வரும் கார்த்திக்குக்கு தற்பொழுது இருபத்திரண்டு வயதுதான். உலக கோப்பை கிரிக்கெட்டில் இப்படி ஒரு சாதனையை செய்துள்ள கார்த்திக், தன்னுடைய இளம் வயதில் ஒரு செஸ் பிளேயராக இருந்துருக்கிறார்.
பின் கிரிக்கெட் விளையாடும் நேரங்களில் நன்றாக பௌலிங் செய்வதைக் கண்ட அவரது தந்தைதான் கார்த்திக்கை கிரிக்கெட் விளையாடுவதற்காக முறையான பயிற்சிக்கு அனுப்பியிருக்கிறார். இதனையடுத்து கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகமாகி தற்பொழுது உலகத்துக்கே தெரியும் அளவிற்கு ஒரு சிறந்த பிளேயராக உருவாகியுள்ளார்.
இத்தகைய ஒரு சாதனையை புரிந்துள்ள கார்த்திக்கிற்கு கிரிக்கெட்டை வழிகாட்டி விட்ட அவரது தந்தையான மெய்யப்பன் அவர்களும், உள்ளூர் போட்டிகளில் விளையாடக்கூடிய ஒரு கிரிக்கெட் பிளேயராக இருந்துள்ளார் என்பது கூடுதல் தகவல். கார்த்திக்கின் வெற்றி குறித்து அவரது தந்தை கூறுகையில், “கார்த்திக் அமீரக டீமிற்காக விளையாடுவார் என எங்களுக்கு தெரியும். ஆனால் உலககோப்பையில் இப்படி ஒரு ஹாட்ரிக் விக்கெட் சாதனையை படைப்பார் என கனவில் கூட தான் நினைக்கவில்லை” என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.