ADVERTISEMENT

“அனைவருக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி கிடைக்கட்டும்”.. மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்த அமீரக தலைவர்கள்..!!

Published: 24 Oct 2022, 8:19 PM |
Updated: 24 Oct 2022, 8:34 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் தீபாவளியை முன்னிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியான மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், தீபாவளியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி தெரிவிக்கையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகெங்கிலும் இந்திய பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடி வரும் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதேபோல் இன்று முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், ஐக்கிய அரபு அமீரக மக்களின் சார்பாக தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

துபாய் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் “உலகளவில் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும், துபாய் உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்தச் சந்தர்ப்பம் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்” என தெரிவித்துள்ளார். மேலும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளர்.

ADVERTISEMENT

இதே போன்று பல தலைவர்களும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தீபாவளியானது வான வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சிறப்பு ப்ரொமோஷன் மற்றும் சலுகைகள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.