ADVERTISEMENT

அமீரக வாகன ஓட்டிகளே… ஓவர்டேக் செய்யும்போது கவனம்.. விதிமீறலுக்கு 1,000 திர்ஹம் வரை அபராதம்..!!

Published: 8 Oct 2022, 8:01 PM |
Updated: 8 Oct 2022, 8:04 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் தங்களுடைய பாதுகாப்பிற்காகவும் மற்ற சாலைப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அவ்வப்போது அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். அவற்றில் அபுதாபி காவல்துறையானது தவறான முறையில் மற்ற வாகனங்களை முந்தி செல்லுதல் மற்றும் திடீரென பாதையில் இருந்து விலகிச் செல்லும் வாகனங்கள் போன்ற ஆபத்தான நடைமுறைகளை எடுத்துக்காட்டி வாகன ஓட்டிகளுக்கு விளக்கியுள்ளது.

ADVERTISEMENT

மத்திய போக்குவரத்துச் சட்டங்கள் வாகனங்கள் ஓவர்டேக் எனும் முந்திச் செல்வது தொடர்பான மூன்று வகையான குற்றங்களைக் குறிப்பிடுகின்றன: அவை

>> தவறான முறையில் ஓவர்டேக் செய்தல்: 600 திர்ஹம் அபராதம், 6 ப்ளாக் பாய்ண்ட்ஸ்

ADVERTISEMENT

>> Road Shoulder என்று சொல்லப்படும் சாலை ஓரங்களில் ஓவர்டேக் செய்தல்: 1,000 திர்ஹம் அபராதம், 6 ப்ளாக் பாய்ண்ட்ஸ்

>> தடைசெய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை ஓவர் டேக் செய்தால்: 600 திர்ஹம் அபராதம்

ADVERTISEMENT

இதனுடன் அபுதாபி காவல்துறையானது விபத்துகளைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய ஏழு முக்கிய விதிகளை பட்டியலிட்டுள்ளது. அவை

>> இடதுபுறம் தவிர்த்து வாகனங்களை ஓவர்டேக் செய்ய வேண்டாம். அதே நேரத்தில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் நேரங்களைத் தவிர்த்து Fast Lane என கூறப்படும் விரைவுப் பாதையை வாகன ஓட்டிகள் (இடது பாதை) பயன்படுத்தக் கூடாது. இதன் பயன்பாடு அவசரகால வாகனங்கள் மற்றும் முந்திச் செல்வதற்கு மட்டுமே என வரையறுக்கப்பட்டுள்ளது.

>> மற்ற வாகனங்களை தவறாக முந்திச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதன்படி முந்திச் செல்ல உத்தேசித்துள்ள வாகனங்களின் ஓட்டுநர்கள், நீங்கள் அவ்வாறு ஓவர்டேக் செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

>> இடது பாதையில் ஓவர்டேக் செய்வதற்கு முன், அது போக்குவரத்து இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

>> சரியாக கவனிக்காமல் வாகன ஓட்டிகள் பாதைகளை மாற்ற வேண்டாம்

>> கவனக்குறைவாக பாதைகளுக்கு இடையே செல்ல வேண்டாம்.

>> திடீரென பாதை மாற்றி செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

>> பாதைகளை மாற்றும்போது இண்டிகேட்டர்களை பயன்படுத்த வேண்டும்.