ADVERTISEMENT

2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப்.. மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிப்பு..!!

Published: 25 Oct 2022, 1:23 PM |
Updated: 25 Oct 2022, 1:27 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2 மணி நேரங்களாக முடங்கிய வாட்ஸ்அப் சேவையானது தற்பொழுது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று காலை 11 மணியளவில் வாட்ஸ்அப் செயலியானது சரிவர செயல்படவில்லை என்றும் மெசேஜ் மற்றும் வீடியோக்களை அனுப்பவும் பெறவும் முடியவில்லை என்றும் வாட்ஸ்அப் பயனர்கள் தெரிவித்து வந்தனர்.

சிறிது நேரத்தில் வாட்ஸ்அப் செயலியின் நிர்வாக குழுவானது இதைப் பின்பற்றி விரைவில் பிரச்சனையை சரிசெய்வதாக தெரிவித்திருந்தது. இது குறித்து தெரிவிக்கையில் “தற்போது மெசேஜ்களை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம், மேலும் விரைவில் அனைவருக்கும் WhatsApp ஐ மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று WhatsApp-ன் நிறுவனமான Meta Platforms (META.O) செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் 2 மணி நேரங்களுக்குப் பிறகு வாட்ஸ்அப் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் வாட்ஸ்அப் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

 

ADVERTISEMENT