ADVERTISEMENT

UAE: கார் மீது டிரக் மோதி இரு வாகனங்களும் தீபிடித்து எரிந்து விபத்து..!! ஒருவர் பலி..!!

Published: 23 Nov 2022, 4:43 PM |
Updated: 23 Nov 2022, 4:45 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள ஸ்வீஹான் சாலையில் செவ்வாய்க்கிழமை டிரக் ஒன்று கார் மீது மோதியதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தற்பொழுது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்த அறிக்கையில் “துரதிர்ஷ்டவசமாக, காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வாகனத்தில் எரிந்த தீயை அணைத்த பிறகு உயிரிழந்த நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் அபுதாபியின் ஸ்வீஹான் சாலையில் அல் ஷம்கா பிரிட்ஜிற்கு முன்பு டிரக்கும் காரும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த மோதலுக்குப் பிறகு, இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக அந்த சாலையை காவல்துறை மூடியது.

மேலும் அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளை கவனமாகவும், எப்போதும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் அல் ஷம்கா பிரிட்ஜ் முதல் அல் ஃபலாஹ் அல் தானி பிரிட்ஜ் வரை இரு திசைகளிலும் ஸ்வீஹான் சாலை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT