ADVERTISEMENT

UAE: போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடியை அறிவித்த எமிரேட்..!!

Published: 10 Nov 2022, 5:20 PM |
Updated: 10 Nov 2022, 5:23 PM |
Posted By: admin

அமீரகத்தின் அஜ்மான் காவல்துறையானது அஜ்மானில் விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியானது நவம்பர் 21, 2022 முதல் ஜனவரி 6, 2023 வரை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் நவம்பர் 11 ஆம் தேதிக்கு முன்னர் புரிந்த  போக்குவரத்து விதிமீறல்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும் என்று அஜ்மான் காவல்துறையின் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுவைமி தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது, ரெட் சிக்னலின் போது நிற்காமல் கனரக வாகனங்களை ஓட்டுவது, சாலைகளில் விதிக்கப்பட்டுள்ள வேக வரம்பை விட 80 கிமீ கூடுதலாக செல்வது உள்ளிட்ட குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து அபராதங்களை சேவை மையங்கள், உள்துறை அமைச்சகம் அல்லது அஜ்மான் போலீஸ் ஆப் மற்றும் சாஹ்ல் ஸ்மார்ட் கியோஸ்க் (Sahl smart kiosks) மூலம் செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் அல் நுவைமி தொடர்ந்து தெரிவிக்கையில், வாகன ஓட்டிகளை இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளவும், போக்குவரத்து விதிகளுக்கு இணங்கவும் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் தனிநபர்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்கவும், சமூக உறுப்பினர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் இந்த தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT