அபுதாபியில் உள்ள முஷ்ரிஃப் மாலில் அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (SEHA) மூலம் விசா எடுப்பவர்களுக்கான புதிய நோய் தடுப்பு மற்றும் மருத்துவ ஸ்கிரீனிங் மையம் (disease prevention and screening centre) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது பற்றி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்த புதிய மையம் ரெசிடென்ஸ் அனுமதிக்கு தேவையான மருத்துவ நடைமுறைகளை எளிதாக அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மையம் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும், இந்த மையத்திற்கு அப்பாய்மெண்ட் இல்லாமல் நேரடியாக மற்றும் அப்பாயிண்ட்மெண்ட் உள்ளவர்கள் என இலு பிரிவினருமே அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது விரைவான பாதை மற்றும் வழக்கமான விசா திரையிடல் சேவைகளையும் வழங்குகிறது. சேஹாவின் வெளிநோயாளர் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நௌரா அல் கெய்தி கூறுகையில், “SEHA-வின் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதும், வாடிக்கையாளர்களின் சுமூகமான நடைமுறைகளை உறுதி செய்வதும் எங்களின் முதன்மையான கடமையாகும். எங்களின் 12 நோய் தடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் மையங்களும் தனியான கட்டிடங்கள் அல்லது தற்போதுள்ள சுகாதார மையங்களின் ஒரு பகுதியில் இருக்கும் நிலையில் தற்பொழுது, முஷ்ரிஃப் மாலில் உள்ள புதிய விசா ஸ்கிரீனிங் மையம், எங்கள் விசா ஸ்கிரீனிங் சேவைகளை குடியிருப்பாளர்கள் எளிதாக அணுகுவதற்காக, குடியிருப்பாளர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் திறக்க திட்டமிட்டுள்ள மையங்களில் முதன்மையானது” என்று கூறியுள்ளார்.
AHS தலைமை மருத்துவ விவகார அதிகாரி டாக்டர் ஒமர் அல் ஹஷ்மி கூறுகையில் “விசா ஸ்கிரீனிங் சென்டரைப் பார்வையிடுவதற்கு நேரத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக, எங்கள் வாடிக்கையாளர்கள் இப்போது குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்யும் போது அல்லது வணிக வளாகத்தில் தங்கள் விசா ஸ்கிரீனிங் சேவையைப் பெறலாம். அவர்கள் விசா ஸ்கிரீனிங்கிற்காக பதிவு செய்தவுடன், அவர்களின் வரிசை எண்ணுடன் ஒரு SMS வரும். அதன்பின் அவர்கள் மாலில் தங்கள் நேரத்தை செலவிடலாம். அவர்களின் முறை வரும்போது அவர்களுக்கு இது குறித்த தகவல் அளிக்கப்படும். அப்போது அவர்கள் மையத்திற்கு இந்த மையத்திற்கு வந்து சேவையைப் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.