ADVERTISEMENT

துபாய் விமான நிலையத்தில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டண முறை..!! இனி பார்க்கிங் கட்டணத்தை எளிதில் செலுத்தலாம்..!!

Published: 17 Nov 2022, 4:42 PM |
Updated: 17 Nov 2022, 4:59 PM |
Posted By: admin

துபாய் சர்வதேச விமான நிலையம் முழுவதும் இனி வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு எளிதான கட்டண முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன பார்க்கிங்களுக்கான கட்டணத்தை மிக எளதில் மொபைலை பயன்படுத்தி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த முறையில் கட்டணம் செலுத்த எந்தவொரு அப்ளிகேஷனையும் டவுன்லோடு செய்யவோ அல்லது வெப்சைட்டை நினைவு வைத்திருக்கவோ அல்லது ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்யவோ அவசியமில்லாமல் வெறும் QR code-ஐ பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் விருப்பத்தை இது வழங்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கூறுகையில், ‘ஸ்கேன், பே அன்ட் கோ (scan, pay and go)’ எனும் வாகன பார்க்கிங் கட்டணத்தை எளிதில் செலுத்தும் முறையானது DXBக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்ட மாற்று கட்டண வழியாகும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

DXB-க்கு வரும் பயனர்கள் தங்கள் பார்க்கிங் நுழைவு டிக்கெட்டில் உள்ள QR குறியீட்டை தங்கள் மொபைல் ஃபோனில் ஸ்கேன் செய்தவுடன் பார்க்கிங் கட்டணம் செலுத்துவதற்கான பேமெண்ட் கேட்வேக்கு (payment gateway) செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றவுடன் பண பரிவர்த்தனையை முடிக்க விசா, மாஸ்டர்கார்டு அல்லது ஆப்பிள் பே ஆகிய மூன்று பாதுகாப்பான கட்டண முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தி முடித்த பிறகு, கேட் பாரியரில் (gate barrier) இருந்து வெளியேற பயனர்களுக்கு 10 நிமிடங்கள் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய மொபைல் கட்டண விருப்பமானது இப்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து கார் பார்க்கிங்களிலும் கிடைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வழக்கமாக, DXB-க்கு வாகனம் ஓட்டி செல்பவர்கள் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் இயந்திரங்களில் டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் பார்க்கிங்கிற்கு பணம் செலுத்துவார்கள். இந்த பார்க்கிங் கட்டண முறையானது தொடர்ந்து மாற்று கட்டண விருப்பமாக கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.