ADVERTISEMENT

ஓமான்: தேசிய தினத்தை முன்னிட்டு 175 கைதிகளுக்கு விடுதலை..!!

Published: 18 Nov 2022, 3:40 PM |
Updated: 18 Nov 2022, 3:42 PM |
Posted By: admin

ஓமானில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற பல கைதிகளுக்கு அரச மன்னிப்பு வழங்கி அவர்கள் விடுதலை பெற சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் உத்தரவு வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த உத்தரவின் படி 175 கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்றும், அவர்களில் 65 பேர் வெளிநாட்டினர் என்றும் ராயல் ஓமான் காவல்துறை (ROP) தெரிவித்துள்ளது. ஓமானில் கொண்டாடப்படும் 52 வது தேசிய தினத்துடனும், கைதிகளின் குடும்பங்களைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

ஓமானில் இன்று (நவம்பர் 18) தேசிய தினமானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு உலகின் பல தலைவர்களும் ஓமான் மக்களுக்கும் அரசுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT