ADVERTISEMENT

துபாயின் அல் கூஸ் தொழில்துறை பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்து..!!

Published: 14 Nov 2022, 6:34 PM |
Updated: 14 Nov 2022, 6:43 PM |
Posted By: admin

துபாயில் இன்று (திங்கட்கிழமை) மதியம் அல் கூஸ் தொழில்துறை பகுதி 1 இல் இருக்கும் கிடங்கு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் அடர்த்தியான, கறுப்புப் புகை வெளியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தை அறிந்த துபாய் குடிமைத் தற்காப்புக் குழுக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 12க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை கட்டுப்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன என்றும் சிவில் தற்காப்பு ஹெலிகாப்டர் ஒன்றும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த தீவிபத்தினால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT