ADVERTISEMENT

குவைத்: மாலில் உள்ள உணவகத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து..!!

Published: 13 Nov 2022, 5:45 PM |
Updated: 13 Nov 2022, 5:48 PM |
Posted By: admin

குவைத்தில் உள்ள உணவகம் ஒன்றின் மேற்கூரையானது திடீரென இடிந்து விழுந்தது அங்கு வந்திருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குவைத்தில் உள்ள மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய ஷாப்பிங் மையங்களில் ஒன்றான அவென்யூஸ் மாலுக்குள்ளே இருக்கும் உணவகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. எனினும் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சேதமடைந்த உணவகத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல், குவைத்தில் இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே பெய்துள்ளது. இதனால் சில சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.