ADVERTISEMENT

துபாயில் நாளை மூடப்படும் முக்கிய சாலைகள்..!! மாற்று வழிகளை அறிவித்த RTA..!!

Published: 19 Nov 2022, 4:58 PM |
Updated: 19 Nov 2022, 6:38 PM |
Posted By: admin

துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (Dubai Fitness Challenge) ஒரு பகுதியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள துபாய் ரன்னை (Dubai Run) முன்னிட்டு துபாயின் முக்கிய சாலை  மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் ரன்க்கான மாபெரும் ஓட்டப் பாதையாக ஷேக் சையத் சாலை மாறவிருப்பதால் நாளை இந்த சாலை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதன் காரணமாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இந்த நிகழ்வின் போது மாற்று சாலைகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி நாளை மூடப்படும் சாலைகளின் விபரங்கள்:

ஷேக் சையம் ரோடு மற்றும் முகமது பின் ரஷித் பவுல்வர்டு ரோடு (Mohammed bin Rashid Boulevard Rd) அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மூடப்படும்.

ADVERTISEMENT

ஃபைனான்சியல் சென்டர் ரோடு அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை இருபுறமும் மூடப்படும்.

ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வார்டு (Sheikh Mohammed bin Rashid Boulevard) அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மூடப்படும்.

ADVERTISEMENT

மாற்று வழிகள்:

அல் வாஸ்ல் ஸ்ட்ரீட், அல் கைல் ரோடு, அல் மேதான் ஸ்ட்ரீட், அல் அசயல் ஸ்ட்ரீட், 2nd ஜபீல் ஸ்ட்ரீட், 2nd டிசம்பர் ஸ்ட்ரீட் மற்றும் அல் ஹதிகா ஸ்ட்ரீட்