ADVERTISEMENT

துபாயின் இந்த முக்கிய சாலைகளில் நாளை வரை கால தாமதம் ஏற்படும்..!! RTA அறிவிப்பு..!!

Published: 9 Nov 2022, 11:52 AM |
Updated: 9 Nov 2022, 11:54 AM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நவம்பர் 10 ம் தேதி (நாளை) வரை துபாயின் இரண்டு முக்கிய சாலைகளில் கால தாமதம் ஏற்படக்கூடும் என்று அறிவுறுத்தியுள்ளது. RTA இது குறித்து வெளியிட்ட ஒரு அறிவிப்பில், Gulfood Manufacturing நிகழ்வு நடைபெறுவதன் காரணமாக அல் முஸ்தக்பால் மற்றும் அல் ஜபீல் 2nd ஸ்ட்ரீட்டில் தாமதம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் இந்த சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் முன்னதாகவே புறப்பட்டு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


Gulfood Manufacturing (GFM) என்பது பிராந்தியத்தின் முன்னணி F&B செயலாக்கம் மற்றும் பேக்கேஜிங் நிகழ்வு ஆகும். இங்கு உணவு உற்பத்தியின் புதிய தொழில்நுட்பம் மற்றும் உணவுப்பொருள் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி இடம்பெறும். இந்நிகழ்வில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,600 கண்காட்சியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. 

ADVERTISEMENT