ADVERTISEMENT

பிறந்தநாள் கொண்டாடும் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான்..!! வாழ்த்துகளை தெரிவித்த அவரின் இரட்டை குழந்தைகள்..!!

Published: 14 Nov 2022, 4:35 PM |
Updated: 14 Nov 2022, 4:45 PM |
Posted By: admin

துபாய் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் இன்று (நவம்பர் 14) தனது 40வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இரட்டை குழந்தைகளான ஷேக்கா மற்றும் ரஷீத் இருவரும் துபாய் இளவரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

ஷேக் ஹம்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஒன்றரை வயதுஇரட்டை குழந்தைகள் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று எழுதப்பட்ட பலூன்களுடன் காணப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

துபாய் பட்டத்து இளவரசர் மற்றும் அவரது மனைவி ஷேக்கா ஷேக்கா பின்த் சயீத் பின் தானி அல் மக்தூம் ஆகியோருக்கு கடந்த ஆண்டு மே மாதம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

இவர்களுடன் சேர்ந்து துபாய் இளவரசரின் பிறந்தநாளுக்கு ஷேக் ஹம்தானின் உறவினர்களும் அமீரக தலைவர்களும் அமீரக மக்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்நத வண்ணம் இருக்கின்றனர்.