அமீரகத்தில் இருக்கக்கூடிய அபுதாபி-அல் அய்ன் சாலையில் வேக வரம்பானது குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் அய்னை நோக்கிய குறிப்பிட்ட சாலையில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இருந்த வேக வரம்பானது 140 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது என அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.
அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் கூட்டு ஆலோசனையின்படி, அல் அய்ன் சிட்டி போகக்கூடிய திசையில் அல் சாத் பிரிட்ஜில் இருந்து அல் அமேரா பிரிட்ஜ் வரை இந்த வேக மாறுபாடு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாற்றங்கள் நவம்பர் 14 திங்கட்கிழமை முதல் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டவும், வேகத்தடைகளை எப்பொழுதும் பின்பற்றவும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன் நெடுஞ்சாலைகளில் வேகத்தைக் குறைப்பது சாலைப் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.