ADVERTISEMENT

அமீரகத்தில் போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடியை அறிவித்த மூன்றாவது எமிரேட்..!!

Published: 21 Nov 2022, 7:17 PM |
Updated: 22 Nov 2022, 9:00 AM |
Posted By: admin

அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடியை ஃபுஜைரா காவல்துறை அறிவித்துள்ளது. இத்திட்டம் நவம்பர் 29ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும், நவம்பர் 26ஆம் தேதிக்கு முன் வாகன ஓட்டிகள் பதிவு செய்த விதிமீறல்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அபராத தள்ளுபடியானது 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ஃபுஜைரா காவல்துறையின் ஜெனரல் கமாண்ட் போக்குவரத்து கூறுகையில் அபராதங்களை 50 சதவீதம் குறைப்பதாகவும், போக்குவரத்து கருப்பு புள்ளிகளை (black points) ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது. இருப்பினும், கடுமையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இந்த அபராதம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபுஜைராவின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஹமத் அல் ஷர்கியின் வழிகாட்டுதலின் கீழ் எடுக்கப்பட்ட இந்த முடிவானது, அமீரகத்தின் மகிழ்ச்சியான தருணத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையே மகிழ்ச்சியை சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விதிமீறல்களுக்கான கட்டணத்தை விரைவுபடுத்தவும், இந்தக் காலக்கட்டத்தில் போக்குவரத்து அபராதத்தில் தள்ளுபடி பெற்று பயனடையவும் சமூக உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இந்த மாதம் போக்குவரத்து அபராதங்களில் தள்ளுபடியை அறிவித்த மூன்றாவது எமிரேட் ஃபுஜைரா ஆகும். முன்னதாக, உம் அல் குவைன் காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு இதே போன்ற தள்ளுபடியை அறிவித்தது. இந்த தள்ளுபடி டிசம்பர் 1, 2022 முதல் ஜனவரி 6, 2023 வரை பொருந்தும் என்றும் கூறியிருந்தது. அதே போல் நவம்பர் 21, 2022 முதல் ஜனவரி 6, 2023 வரை போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவதாக அஜ்மான் காவல்துறை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT