ADVERTISEMENT

அமீரகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய தின விடுமுறை நாட்கள்..!!

Published: 18 Nov 2022, 3:55 PM |
Updated: 18 Nov 2022, 4:11 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் 2022ம் ஆண்டிற்கான தியாகிகள் நினைவு தினம் மற்றும் தேசிய தினத்தை முன்னிட்டு அமீரக அமைச்சரவை அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. இந்த விடுமுறையானது டிசம்பர் 1 வியாழன் முதல் டிசம்பர் 3 சனிக்கிழமை வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், டிசம்பர் 5, திங்கட்கிழமை முதல் மீண்டும் வேலை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உள்ளவர்களுக்கு, இது நான்கு நாள் தொடர் விடுமுறையை கிடைக்க செய்யும்.

நாட்டின் தியாகிகளைக் கொண்டாடவும், அவர்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்காகவும் மற்றும் அவர்களின் தியாகங்களை அங்கீகரிப்பதற்காகவும் ஆண்டுதோறும் நவம்பர் 30 ஆம் தேதியை ஐக்கிய அரபு அமீரகம் தியாகிகள் நினைவு தினமாக அதிகாரப்பூர்வமாக கொண்டாடுகிறது.

ADVERTISEMENT

இருப்பினும், இந்த வருடம் தியாகிகள் நினைவு தினத்திற்கான விடுமுறை டிசம்பர் 1 முதல் 3 வரையிலான தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 51வது தேசிய தினத்தின் ஏற்பாட்டுக் குழுவால் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று டிசம்பர் 3 முதல் 11 வரை என 9 நாட்கள் அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் (Adnec) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தின அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அனைத்து உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களிலும் டிசம்பர் 2 ஆம் தேதி நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT