ADVERTISEMENT

UAE: இந்த ஆண்டின் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை..!! பல்வேறு சலுகைகளை வழங்கும் விற்பனை நிறுவனங்கள்..!!

Published: 24 Nov 2022, 6:02 PM |
Updated: 24 Nov 2022, 6:06 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் நபர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) White Friday அல்லது Black Friday என அழைக்கப்பட்டு பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கும் சிறப்பு விற்பனையின் போது ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு தள்ளுபடியைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதிலும், சில பொருட்களுக்கான சலுகைகள் 90 சதவீதம் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Black Friday எனும் சிறப்பு தள்ளுபடி விற்பனையானது ஆன்லைன் மற்றும் நேரடியாக செல்லும் கடைகளில் எலக்ட்ரானிக்ஸ், ஆடைகள், தனிப்பட்ட மற்றும் சுகாதாரப் பொருட்கள் மற்றும் பல பல்வேறு தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Samsung, Xiaomi, Dell, Black+Decker, Tefal, Hugo Boss, Olay, Guess, Tissot போன்ற சிறந்த உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் விலைகள் இந்த விற்பனையின் போது குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் நாளை (நவம்பர் 25) முதல், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மால்கள், துபாய் ஹில்ஸ் மால், துபாய் மெரினா மால், துபாய் மால், மெர்கடோ டவுன் சென்டர், இபின் பதூதா, மால் சர்க்கிள், நக்கீல் மால் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துபாயின் பெரிய வணிக வளாகங்களில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் மூன்று நாள் சூப்பர் விற்பனையை அமீரகவாசிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மேலும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலின், சூப்பர் சேலில் ஷாப்பிங் செய்பவர்கள் 30,000 திர்ஹம் மதிப்புள்ள கிஃப்ட் கார்டை வெல்லக்கூடிய வாய்ப்பைப் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சஃபீர் குழுமம் குழந்தைகளுக்கான ஆடைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஃபேஷன், பாதணிகள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், பரிசுகள் மற்றும் பொம்மைகள் ஆகியவற்றின் மீது 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஆன்லைன் தளமான Noon.com பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கும் yellow friday விற்பனையை அறிவித்துள்ளது. மேலும், சில வங்கிகளின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் விற்பனையின் போது கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் Noon.com நிறுவனம் Adidas, Nike, Tommy Hilfiger, Calvin Klein மற்றும் பல முன்னணி பிராண்டுகளின் 25,000-க்கும் மேற்பட்ட ஸ்டைல்களில் ‘’Buy one, Get one” ஆஃபரையும் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோன்று அமேசான் நிறுவனமும் அமீரகத்தில் இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் பூஜ்ஜிய சதவீத தவணை திட்டங்கள் உள்ளிட்ட சிறந்த சலுகைகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.