ADVERTISEMENT

அமீரக பிரதமரை துபாயில் சந்தித்த அமீரக ஜனாதிபதி..!! நாட்டின் வளர்ச்சி குறித்து விவாதித்ததாக தகவல்..!!

Published: 12 Nov 2022, 6:14 PM |
Updated: 12 Nov 2022, 6:27 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், அமீரகத்தில் உள்ள அல் மர்மூம் மஜ்லிஸில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களை சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின் போது இவ்விருவரும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதன் குடிமக்கள் தொடர்பான பல பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக மக்களின் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான நன்மைகளை அடைய நாட்டின் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியை இயக்குவதற்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை அனைத்து மட்டங்களிலும் நம்பிக்கையுடனும், துரிதப்படுத்தப்பட்ட வேகத்துடனும் தொடர மேலும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அவர்கள் இந்த கலந்துரையாடலில் விவாதித்தனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இந்த சந்திப்பில் துபாய் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் துபாயின் துணை ஆட்சியாளர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான், ஜனாதிபதி நீதிமன்றத்தின் துணைப் பிரதமரும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் அமைச்சருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.