ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று உணரப்பட்ட நில அதிர்வு..!! ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் என தகவல்..!!

Published: 30 Nov 2022, 9:02 PM |
Updated: 30 Nov 2022, 9:05 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக நேரப்படி இன்று இரவு 7.17 மணிக்கு தெற்கு ஈரானில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஈரானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குடியிருப்பாளர்களும் உணர்ந்ததாக NCM உறுதிப்படுத்தியுள்ளது. துபாயில் வசிக்கும் பலர் இந்த அதிர்வினை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

குடியிருப்பளர் ஒருவர் கூறுகையில் இந்த நில அதிர்வானது 5 வினாடிகள் நீடித்ததாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த நவம்பர் 18 ம் தேதி இதே போல் ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அமீரகத்திலும் உணரப்பட்டதாக கூறப்பட்டது.

ADVERTISEMENT

பொதுவாகவே ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வருடத்திற்குள் பல சிறிய நில நடுக்கங்களை எதிர்கொள்கிறது என்றும் இவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஏற்கெனவே வானியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.