ADVERTISEMENT

UAE: மாலில் காட்சிபடுத்தப்பட இருக்கும் நூற்றுக்கணக்கான சூப்பர் கார்கள்..!! எங்கே..??

Published: 11 Nov 2022, 6:14 PM |
Updated: 11 Nov 2022, 6:39 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் 400 க்கும் மேற்பட்ட பலவிதமான சூப்பர் கார்கள் ஒரே இடத்தில் வலம் வரவுள்ளன. அஜ்மானில் இருக்கக்கூடிய சிட்டி சென்டர் அஜ்மானில் இந்த கார்கள் நாளை (நவம்பர் 12) காட்சிக்கு வைக்கப்படும் என்றும் இவற்றில் சில 1950 காலகட்டத்தில் இருந்த சில பழங்கால கார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது .

ADVERTISEMENT

இந்த கண்காட்சியானது மாலின் பார்க்கிங் லாட்டில் வலம் வர உள்ளன. சிட்டி சென்டர் அஜ்மான் முதன்முறையாக, அஜ்மான் சுற்றுலா மற்றும் எமிரேட்ஸ் கார்கள் சங்கத்துடன் இணைந்து இந்த மோட்டார் ஷோவை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வானது மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நுழைவு D இல் உள்ள மாலின் முதல் நிலை பார்க்கிங்கில் (first level parking) நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், இரவு 7 மணிக்கு ஒரு மோட்டார் பைக்குகளின் அணிவகுப்பு இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளதாகவும், அதில் 100 க்கும் மேற்பட்ட மோட்டார் பைக்குகள் சிட்டி சென்டர் அஜ்மானில் இருக்கக்கூடிய கண்காட்சி பகுதியில் ஒன்றாக வலம் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் இடம்பெறும் பல மோட்டார் பைக்குகள், RC கார்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட கிளாசிக் வாகனங்கள் பிரத்யேக ஆட்டோமொபைல் கிளப்புகளின் உறுப்பினர்களால் தனியாருக்குச் சொந்தமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பார்வையாளர்கள் live DJ முதல் குழந்தைகளுக்கான கேமிங் பகுதிகள் வரை பரந்த அளவிலான பொழுதுபோக்கு விருப்பங்களையும் இங்கு அனுபவிக்கலாம் என்றும், ஃபுட் டிரக்குகளும் இந்த நிகழ்வில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்டி சென்டர் அஜ்மானின் மோட்டார் ஷோவானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டங்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல நிகழ்வுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.