ADVERTISEMENT

UAE: வேலை இழந்தோருக்கான பண உதவி அளிக்கும் திட்டத்தை கட்டாயமாக்கிய அரசு..!! ஜனவரி முதல் அமல்..!!

Published: 9 Nov 2022, 5:44 PM |
Updated: 9 Nov 2022, 5:50 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீரென வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு புதிய காப்பீடு திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த திட்டமானது வரும் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், வேலை இழப்புக்கு எதிரான காப்பீட்டுத் திட்டத்தை தொடங்குவது தகுதியுள்ள அனைவருக்கும் கட்டாயத் தேவையாக இருக்கும் என்று மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) தற்பொழுது அறிவித்துள்ளது. அதன்படி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுத் துறைகளின் ஊழியர்கள் வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து மாதத்திற்கு 5 திர்ஹம்ஸ் முதல் சந்தா செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

அமைச்சகம் அறிவித்துள்ள ஒழுங்கீனம் காரணமாக வேலையை இழத்தல், தானாகவே வேலையை விடுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களுக்கு இல்லாமல் மற்ற காரணங்களால் திடீரென வேலையை இழக்கும் ஊழியர்களுக்கு, ஒரு முறை அளிக்கப்படும் கோரிக்கைக்கு அதிகபட்சமாக தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மிகாமல் நிதியுதவியை இந்தத் திட்டம் வழங்குகிறது.

ADVERTISEMENT

சந்தா செலுத்தும் வழிகள்

  •  காப்பீட்டுக் குழுவின் இணையதளம் (www.iloe.ae) மற்றும் ஸ்மார்ட் அப்ளிகேஷன்
  • வங்கி ATM மற்றும் கியோஸ்க் (kiosk) இயந்திரங்கள்
  • வணிக சேவை மையங்கள் (business service center)
  • பணம் பரிமாற்ற நிறுவனங்கள் (money exchange companies)
  • du மற்றும் Etisalat
  • SMS

இன்சூரன்ஸ் வழங்கக்கூடிய நிறுவனங்கள்


MoHRE இன் படி, ஒன்பது நிறுவனங்கள் இந்த இன்சூரன்ஸை வழங்குகின்றன.

  • துபாய் இன்சூரன்ஸ் நிறுவனம் (Dubai Insurance Company)
  • அபுதாபி நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் (Abu Dhabi National Insurance Company)
  • அல் அயன் அஹ்லியா இன்சூரன்ஸ் நிறுவனம் (Al Ain Ahlia Insurance Company)
  • எமிரேட்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் (Emirates Insurance Company)
  • தேசிய பொது காப்பீட்டு நிறுவனம் (National General Insurance Company)
  • ஓரியண்ட் இன்சூரன்ஸ் (Orient Insurance)
  • அபுதாபி நேஷனல் தக்காஃபுல் நிறுவனம் (Abu Dhabi National Takaful Company)
  • ஓமன் இன்சூரன்ஸ் நிறுவனம் (Oman Insurance Company)
  • ஓரியண்ட் UNB தக்காஃபுல் நிறுவனம் (Orient UNB Takaful Company)

இழப்பீடு தொகையானது இரண்டு பிரிவுகளாக வகைபடுத்தப்பட்டுள்ளது. அவை:

ADVERTISEMENT

>> வகை 1: அடிப்படை சம்பளம் (basic salary) 16,000 திர்ஹம் மற்றும் அதற்கும் குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்கள்

காப்பீட்டு பிரீமியம்: மாதத்திற்கு 5 திர்ஹம்

மாதாந்திர இழப்பீடு: 10,000 திர்ஹமை விட அதிகமாக இருக்காது

>> வகை 2: அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம்ஸிற்கு மேல் வாங்கும் ஊழியர்கள்கா

காப்பீட்டு பிரீமியம்: மாதம் 10 திர்ஹம்ஸ்

மாதாந்திர இழப்பீடு: 20,000 திர்ஹம்ஸிற்கு மேல் இருக்காது

காப்பீடு பெறுவதற்கான கோரிக்கைகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?

>> வேலை இழப்புக்கு முந்தைய 12 மாதங்களில் வாங்கிய சராசரி சம்பளத்தில் 60 சதவீதம் மாதாந்திர இழப்பீடாக கொடுக்கப்படும்.

>>  ஒரு முறை சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைக்கு அதிகபட்ச இழப்பீடாக தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை காப்பீட்டுத் தொகை பெறலாம்

>> காப்பீட்டுத் தொகை பெறுவதற்கான அதிகபட்ச காலம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்த அனைத்து காலங்களிலும் ஒரு ஊழியர் காப்பீடு தொகை பெறுவதற்கான காலம் 12 மாதங்களுக்கு மிகாமல் இருக்காது (அந்த ஊழியர் எத்தனை கோரிக்கை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்)