ADVERTISEMENT

UAE: சட்டவிரோதமாக டாக்ஸிகளை இயக்கினால் 10,000 திர்ஹம்ஸ் வரை அபராதம்..!! அதிகாரிகள் எச்சரிக்கை..!!

Published: 15 Nov 2022, 8:22 PM |
Updated: 15 Nov 2022, 8:24 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமீரகத்தில் சட்ட விரோதமாக டாக்ஸிகளை இயக்கினால் 10,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தற்பொழுது எச்சரித்துள்ளனர். இது குறித்து ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) வெளியிட்ட அறிவிப்பில் 2022 ஆம் ஆண்டில் 1,813 சட்டவிரோதமாக பயணிகள் போக்குவரத்து இயக்கத்தை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இவ்வாறு விதிகளை மீறுபவர்களை ஆய்வாளர்கள் கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ராஸ் அல் கைமா காவல்துறையுடன் இணைந்து, RAKTA விதிகளை மீறுபவர்களுக்கு முதலில் 5,000 திர்ஹம்கள் அபராதம் விதிப்பதாகவும் இது மீண்டும் மீண்டும் மீறும் பட்சத்தில் 10,000 திர்ஹமாக இரட்டிப்பாக அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகளின் பாதுகாப்பிற்கு இந்த சட்ட விரோத நடைமுறை ஆபத்தை ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் இந்த வாகனங்களில் இல்லாததால், தனியார் வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டவிரோதமானது என்றும் இத்தகைய வாகனங்கள் பெரும்பாலும் இன்சூரன்ஸ் இல்லாதவை என்றும் RAKTA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனால் அங்கீகரிக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்களுக்கு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.