ADVERTISEMENT

அமீரகத்தின் 3 எமிரேட்டுகளில் பெய்த கனமழை..!! மலைப்பகுதிகளில் காணப்பட்ட நீர்வீழ்ச்சி..!!

Published: 8 Nov 2022, 7:33 AM |
Updated: 8 Nov 2022, 7:43 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளான ஃபுஜைரா, திப்பா, ராஸ் அல் கைமா மற்றும் ஷார்ஜாவின் கல்பா ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. கனமழை பெய்து வருவதன் காரணமாக அதிகாரிகள் சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அமீரகத்தில் பெய்து வரும் இந்த கனமழை காரணமாக சில மலைப்பகுதிகளில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் வழிந்தோடி வருகிறது.

ADVERTISEMENT

கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். ‘அல் வஸ்ம் (Al Wasm)’ என்று அழைக்கப்படும், இந்த மழை பருவமானது வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, பலத்த காற்று மற்றும் லேசானது முதல் கனமழை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த கால கட்டத்தில் பாலைவனத்தில் பசுமை பூக்க ஆரம்பிக்கும் என்றும் அமீரகத்தில் தாவர வளர்ச்சி மற்றும் விவசாயத்திற்கு இது சிறந்த பருவமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த பருவத்தைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாத இறுதி முதல் குளிர்காலம் ஆரம்பிக்கும் என்றும் இந்த குளிர் நிலை 100 நாட்களுக்கு நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.