ADVERTISEMENT

அமீரகத்தில் உணவு டெலிவரி சேவையை நிறுத்தும் Zomato.. அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்..!!

Published: 15 Nov 2022, 10:20 AM |
Updated: 15 Nov 2022, 10:32 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் Zomatoவின் உணவு ஆர்டர் செய்யும் சேவையானது நவம்பர் 24 முதல் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி Zomato அப்ளிகேஷனில் உணவை ஆர்டர் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் அமீரகத்தில் உணவு டெலிவரி சேவையை வழங்கி வரும் மற்றொரு நிறுவனமான தலாபத் (Talabat) அப்ளிகேஷனிற்கு மாற்றி விடப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த Zomato அப்ளிகேஷன் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் ஆனால் அதன் உணவு ஆர்டர் செய்யும் அம்சம் மட்டும் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வங்கி விவரங்களும் பாதுகாப்பாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி நவம்பர் 24 முதல், பயனர்கள் Zomato அப்ளிகேஷனுக்குள் நுழையும்போது, டெலிவரி (Delivery), டைனிங் (Dining) மற்றும் ப்ரோ (Pro) ஆகிய மூன்று விருப்பங்களை பெறுவார்கள் என்றும் நவம்பர் 24 முதல், பயனர்கள் ‘டெலிவரி’ என்பதைக் கிளிக் செய்யும் போது, ​​அவர்கள் Talabat செயலியைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் மற்ற இரண்டு விருப்பங்களும் வழக்கம் போல் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் கூறுகையில் “வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான உணவகங்களில் இருந்து Talabat செயலியில் தொடர்ந்து ஆர்டர் செய்யலாம், இதில் பல Zomato பிராண்டுகள் அடங்கும்” என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் உணவகப் பங்குதாரர்களும் தலாபத்தில் இணைந்து தங்கள் வணிகங்களை வளர்த்துக் கொள்ள தேர்வு செய்யலாம், அதே நேரத்தில் தலாபத் தரும் டெலிவரி அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் Zomato அதன் உணவக கண்டுபிடிப்பு (restaurant discovery) மற்றும் உணவருந்தும் வணிகத்தை (Dining out business) தொடர்ந்து வழங்கும் என கூறப்பட்டுள்ளது. அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் ஆகிய நான்கு அமீரக நகரங்களில் Zomato-வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Vibe Check’ மற்றும் ‘Zomato Pay’ போன்ற புதிய அம்சங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Vibe Check அம்சமானது உணவகங்கள் தங்களை விளம்பரப்படுத்துவதை எளிதாக்குகிறது. உணவகங்கள் அவற்றின் இருப்பிடங்கள் மற்றும் சிறப்புகளைக் காட்ட, இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்ற சிறிய வீடியோக்களை இதில் வெளியிடலாம்.

மற்றொரு அம்சமான Zomato Pay பயனர்கள் பணம் செலுத்தவும் தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகளைப் பெறவும் உதவுகிறது. இந்த அம்சங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக கூட்டாளர்களுக்கான மதிப்பை மேலும் மேம்படுத்தும் என்று Zomato தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனமானது டிசம்பர் 30, 2022க்குள் உணவகங்களின் வங்கிக் கணக்குகளில் விளம்பரச் சேவைகளுக்காக வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மற்றும் பயன்படுத்தப்படாத கிரெடிட் நோட்டுகளுடன் தொடர்புடைய அனைத்துத் தொகைகளுக்கும் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்துத் தொகைகளுக்கும் பணம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.