ADVERTISEMENT

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் வான வேடிக்கை நிகழ்வுகளை எங்கெங்கே காணலாம்..??

Published: 19 Dec 2022, 8:22 PM |
Updated: 19 Dec 2022, 8:25 PM |
Posted By: admin

துபாயில் இந்த ஆண்டிற்கான துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலானது (DSF) கண்கவரும் வண்ணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த டிசம்பர் 15 முதல் தொடங்கியுள்ள இந்நிகழ்வில் பொருட்களுக்கு தள்ளுபடி, சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என துபாய் முழுவதும் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இந்த கொண்டாட்டத்தில் வான வேடிக்கை நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. வான வேடிக்கை மட்டும் அல்லாது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் நிகழ்ச்சியும் தினமும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

அதில் வான வேடிக்கை நிகழ்த்தப்படும் நான்கு இடங்கள் மற்றும் தேதிகள் குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

1. புளூவாட்டர்ஸ்

டிசம்பர் 16 முதல் 25: இரவு 9.30 மணி

ADVERTISEMENT

டிசம்பர் 31: இரவு 11.59 மணி

ஜனவரி 9 முதல் 15: இரவு 8.30 மணி

2. அல் சீஃப்

டிசம்பர் 26 முதல் 30: இரவு 8.30 மணி

ஜனவரி 1: இரவு 8.30 மணி

3. துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்

ஜனவரி 2 முதல் 8 வரை: இரவு 9 மணி

ஜனவரி 16 முதல் 22 வரை: இரவு 9 மணி

4. JBR

டிசம்பர் 16 முதல் 25: இரவு 9.30 மணி

டிசம்பர் 31: இரவு 11.59 மணி

ஜனவரி 9 முதல் 15: இரவு 8.30 மணி

அதே போல் DSF ட்ரோன் ஷோ இசை மற்றும் மிகவும் மேம்பட்ட 3D ட்ரோன் தொழில்நுட்பத்துடன் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும் இது ஜுமேரா கடற்கரை குடியிருப்புக்கு எதிரே உள்ள தி பீச் மற்றும் புளூவாட்டர்ஸில் இரவு 7 மற்றும் இரவு 10 மணிக்கு என DSF நடைபெறும் காலம் முழுவதும் தினமும் இருமுறை  காட்சிபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தாண்டு தினத்தன்று, நிகழ்ச்சி நேரங்கள் இரவு 8 மணிக்கும் 11 மணிக்கும் இருக்கும் என்றும் லேசர் ஷோ டிசம்பர் 23-24, ஜனவரி 13-14 மற்றும் ஜனவரி 27-28 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.