ADVERTISEMENT

UAE: வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங் அறிவிப்பு..!! புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முனிசிபாலிட்டி தகவல்..!!

Published: 29 Dec 2022, 5:08 PM |
Updated: 29 Dec 2022, 5:11 PM |
Posted By: admin

புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 1, 2023 அன்று வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று ஷார்ஜா முனிசிபாலிட்டி தற்பொழுது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனால் பொது வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு அன்றைய தினம் பார்க்கிங் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் நீல நிறத்தில் அடையாளம் காணப்பட்ட 7 நாள் கட்டண பார்க்கிங் மண்டலங்களுக்கு (7 days paid parking zones) இந்த விலக்கு பொருந்தாது எனவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT