ADVERTISEMENT

அமீரக ரெசிடென்சி, விசிட் விசாவிற்கு ஏதேனும் அபராதம் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி..??

Published: 25 Dec 2022, 8:53 PM |
Updated: 25 Dec 2022, 8:58 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு சுற்றுலாப் பயணியாக வந்துள்ள நீங்கள் உங்கள் விசாவிற்கான காலம் முடிந்த பின்னரும் அமீரகத்தில் தங்கியிருக்கலாமா என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அல்லது உங்கள் ரெசிடென்ஸ் விசாவை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறிவிட்டீர்களா? நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலாவாசியாக இருந்தாலும் அல்லது இங்கு வசிப்பவராக இருந்தாலும், உங்கள் விசா நிலை குறித்தும், ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் உங்களுக்கு கவலைகள் இருந்தால், அமீரகத்தில் உள்ள இமிகிரேஷன் அதிகாரிகளிடம் அதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது பற்றி இங்கே காணலாம்.

ADVERTISEMENT

அமீரகத்தை பொறுத்தவரை, ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்களுக்கு அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்கு சலுகைக் காலங்களை வழங்கியுள்ளனர். இது விசா காலம் முடிந்து அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு அவர்களின் விசா அந்தஸ்தை ஒழுங்காகப் பெற அவர்களுக்கு சிறிது கால அவகாசம் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு குடியிருப்பு விசா வைத்திருப்பவராக இருந்தால், உங்களின் புதிய குடியிருப்பு விசாவைப் பெறவும் அல்லது நாட்டை விட்டு வெளியேறவும் விசா காலாவதியான தேதிக்குப் பிறகு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.

இதேபோல், சுற்றுலாப் பயணிகள் மற்றும் விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் விசா காலாவதியான தேதிக்குப் பிறகு 10 நாட்கள் சலுகைக் காலம் உள்ளது. இந்த சலுகைக் காலத்திற்கு பிறகு காலாவதியான விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் அமீரகத்திற்கு சுற்றுலா அல்லது விசிட் விசாவில் வந்த பார்வையாளர்கள் அமீரகத்தில் தொடர்ந்து தங்கினால் அமீரக குடிவரவு அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படும்.

ADVERTISEMENT

விசாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி..?

அமீரகத்தில் வழங்கப்பட்ட ஏதேனும் விசாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைனில் எளிதாக கண்டறியலாம். அமீரகத்தில் துபாய் எமிரேட்டுக்கான விசாக்களை வழங்கும் வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) அல்லது அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய அனைத்து மற்ற எமிரேட்டுகளுக்கு அடையாள, குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான பெடரல் ஆணையம் (ICP) மூலம் உங்கள் விசா வழங்கப்படலாம்.

ADVERTISEMENT

எந்த எமிரேட் விசா வழங்கியிருந்தாலும், விசா அபராதங்களைச் சரிபார்க்க, இந்த இரண்டு குடிவரவு அதிகாரிகளின் இணையதளங்களைப் பயன்படுத்தலாம். உங்கள் விசா துபாயில் வழங்கப்பட்டிருந்தாலும், ஆன்லைன் அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதால், துபாய் விசா அபராதம் குறித்த விவரங்களை ICP இணையதளமும் உங்களுக்கு வழங்கும்.

• GDRFA இணையதளம் – www.gdrfa.gov.ae

துபாய் எமிரேட்டில் வழங்கப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் தங்களின் விசாவிற்கு ஏதேனும் அபராதம் உள்ளதா என்பதை அறிய இங்கு கிளிக் செய்து அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்புவதன் மூலம் விசா அபராதம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கு அபராதம் எதுவும் இல்லை என்றால், GDRFA இணையதளத்தில் பச்சை நிற பாப்-அப் செய்தி மூலம் உங்கள் கோப்பு எண்ணில் அபராதம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்படும். .

• ICP இணையதளம் – www.icp.gov.ae

அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய அனைத்து மற்ற எமிரேட்டில் வழங்கப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் தங்களின் விசாவிற்கு ஏதேனும் அபராதம் உள்ளதா என்பதை அறிய இங்கு கிளிக் செய்து அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்புவதன் மூலம் விசா அபராதம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.