உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் உலக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகம் இந்தாண்டில் ஒரு நாள் கூட வேலை செய்வதை நிறுத்தவில்லை. 2022ம் ஆண்டு முழுவதும் அமீரகம் உழைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரக்கூடிய ஆண்டானது இன்னும் அழகான ஒரு ஆண்டாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் அரேபியர்கள், மற்றும் உலகின் மற்ற அனைத்து மக்களுக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதன் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் பகிர்ந்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இறைவனின் ஆசியுடன் 2023 ம் ஆண்டு அனைவருக்கும் நன்மை பயக்கும் மற்றும் அமைதியின் ஆண்டாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.