ADVERTISEMENT

உலக சாதனை படைக்கும் புர்ஜ் கலீஃபா புத்தாண்டு கொண்டாட்டம்: பார்க்கிங், சாலை மூடல், செல்வதற்கான வழிகாட்டுதல்கள்.. அனைத்து தகவல்களும்..!!

Published: 28 Dec 2022, 8:24 PM |
Updated: 28 Dec 2022, 8:34 PM |
Posted By: admin

ஒவ்வொரு வருட புத்தாண்டின் போதும் துபாயில் இருக்கும் உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் (Burj Khalifa) வான வேடிக்கை, லேசர் ஷோ என புத்தாண்டு மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அது போலவே தற்பொழுது வரவிருக்கும் 2023-ம் ஆண்டு புத்தாண்டின் போதும் புர்ஜ் கலீஃபா களை கட்டப் போகின்றது என Emaar அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

புர்ஜ் கலீஃபாவில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தாண்டு மெகா-ஷோவிற்கு இந்தாண்டும் Emaar தயாராகி வரும் நிலையில், துபாய் டவுன்டவுனில் புத்தாண்டை முன்னிட்டு லேசர், ஒளி மற்றும் வான வேடிக்கை நிகழ்ச்சிகளை மிக பிரம்மாண்டமாக நடத்தவுள்ளது.

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஷேக் முகம்மது பின் ரஷீத் பவுல்வர்டு (Sheikh Mohammed Bin Rashid Boulevard) பகுதி மாலை 6 மணி முதல் மூடப்படும் என்பதால் பார்க்கிங் உள்ளடங்கிய ஹோட்டல் அல்லது உணவகத்தில் முன்பதிவு செய்திருக்கும் விருந்தினர்கள் இந்த நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முழு திறனை அடையும் வரை துபாய் மாலில் பார்க்கிங் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த நேரத்திலும் முழு திறனை அடையும் என்பதால், பார்வையாளர்கள் முன்கூட்டியே வருவதன் மூலம் இப்பகுதியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பார்க்கிங் அணுகலைச் சுற்றியுள்ள சாலை மூடப்பட்டவுடன், மேலும் அனுமதி கிடைக்காது என்றும் சாலை மூடப்படும் வரையில் டாக்சிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சாலை மூடல்கள் செயல்படுத்தப்பட்டவுடன் பார்வையாளர்கள் ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டை அணுக முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூடப்பட்ட சாலைகளானது தோராயமாக அதிகாலை 1 மணி அல்லது அதிகாலை 2 மணி அளவில் திறக்கப்படும் என்றும் இது துபாய் காவல்துறை மற்றும் RTA மூலம் முடிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. துபாய் டவுன்டவுன் மற்றும் துபாய் மால் பார்க்கிங்கிற்குள் உள்ள ஹோட்டல்கள், குடியிருப்புகள் மற்றும் F&B விற்பனை நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடனேயே வெளியேற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் மாலில் உள்ள திறனைப் பொறுத்து, துபாய் மால் மெட்ரோ நிலையம் மதியம் 2-10 மணிக்குள் எந்த நேரத்திலும் மூடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு திறனை அடைந்தவுடன் துபாய் மால் மெட்ரோ நிலையம் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டை அணுகுதல்

ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டு பகுதியை அணுக பார்வையாளர்களுக்கு ஐந்து நுழைவு இடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவை:

கேட் 1: டவுன்டவுன் கமாண்ட் சென்டரின் பின்புறம் (Behind Downtown Command Centre)

கேட் 2: புர்ஜ் விஸ்டாவின் பின்புறம் (Behind Burj Vista)

கேட் 3: Emaar  அருகில், பவுல்வர்டு பிளாசா கட்டிடத்திற்கு அருகில் (Near Emaar Square, adjacent to Boulevard Plaza Building)

கேட் 4: அட்ரஸ் பவுல்வர்டு எதிர்புறம் (Opposite Address Boulevard)

கேட் 5: அட்ரஸ் டவுன்டவுன் எதிர்புறம் (Opposite Address Downtown)

புர்ஜ் கலீஃபாவில் வரவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் மாபெரும் லேசர் கண்காட்சியானது புதிய உலக சாதனையை படைக்கும் என கூறப்பட்டுள்ளது.