ADVERTISEMENT

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் அமீரக பாஸ்போர்ட் முதலிடம்..!! 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்..!!

Published: 9 Dec 2022, 3:48 PM |
Updated: 9 Dec 2022, 4:05 PM |
Posted By: admin

உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட்டானது 2022 ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்டன் கேபிட்டல் எனும் தளமானது இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது பாஸ்போர்ட்டுகளின் மொபிலிட்டி ஸ்கோரின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகளை வரிசைப்படுத்துகிறது என்று கூறியுள்ளது. அதாவது விசா இல்லாமல் பயணிக்கும் அல்லது வருகையின் போது விசாவைப் (visa on arrival) பெறுவதற்கான தகுதியின் அடிப்படையில் தர வரிசைப்படுத்தப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 180 நாடுகளுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 121 நாடுகளுக்கு விசா இல்லாமலும் 59 யாடுகளுக்கு அரைவல் விசா மூலமாகவும் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகம், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற ஐரோப்பிய நாடுகளையும் பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டின் உலகின் சிறந்த பாஸ்போர்ட்டாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோய் காலம் முழுவதும், உலகெங்கிலும் காணப்பட்ட லாக்டவுன் பிரச்சனைகளால் ஐக்கிய அரபு அமீரகம் குறைவாகவே பாதிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக 10 ஐரோப்பிய நாடுகள் மற்றும் தென் கொரியா ஆகியவை 173 மதிப்பெண்களுடன் இரண்டாவதாக தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ஆப்கானிஸ்தான் மொபிலிட்டி ஸ்கோர் 38 உடன் கடைசி இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த தரவரிசைப் பட்டியலில் கத்தார் 45வது இடத்திலும், குவைத் 47வது இடத்திலும் உள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மிகப்பெரிய பொருளாதார நாடான சவுதி அரேபியா 54வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.